உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் சங்கரமடத்தில் 108 சுமங்கலிகள் பூஜை

விழுப்புரம் சங்கரமடத்தில் 108 சுமங்கலிகள் பூஜை

விழுப்புரம் : விழுப்புரம் சங்கரமடத்தில் 108 சுமங்கலிகள் பூஜை நடைபெற்றது. விசுவ ஹிந்து பரிஷத் மாத்ரு சக்தி துர்கா வாகினி அமைப்பு சார்பில் நேற்று முன்தினம் நடந்த பூஜையில் பங்கேற்ற மருமகள், மகள், தங்கை நிலையில் இருந்தவர்கள், தங்களது மாமியார், அம்மா, அக்கா, நாத்தனார் என்ற நிலைகளில் உள்ளவர்களுக்கு பாதபூஜை செய்தனர். பின்னர், அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலி சரடு வழங்கி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர். சுமங்கலி பூஜை நிகழ்வுக்கு விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பாபு, நகரத் தலைவர் சரவணன், மாத்ருசக்தி அமைப்பாளர் சுபாஷினி, இணை அமைப்பாளர் மாலதி, மாவட்ட துர்கா வாகினி அமைப்பாளர் புஷ்பா பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை