உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 12 சவரன் நகை, பணம் கொள்ளை வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்

12 சவரன் நகை, பணம் கொள்ளை வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்

வானுார் : வானுார் அருகே தனியார் பார் கேஷியரின் வீட்டின் பூட்டை உடைத்து 12 சரவன் நகை, 70 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வானுார் அடுத்த ஆகாசம்பட்டு பெருமாள் நகர் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 35; புதுச்சேரியில், தனியார் பாரில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவர், ஆயுதபூஜை அன்று இரவு, வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்தினருடன் புதுச்சேரி மாநிலம், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்றார்.நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கேட் மற்றும் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அறைக்குள் இருந்த பீரோவை உடைத்து, 12 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வானுார் இன்ஸ்பெக்டர் சிவராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், விழுப்புரத்திலிருந்த மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. கைரேகை பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கல்பனா தடயங்களை சேகரித்தார்.வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை