உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒருவரை தாக்கிய 2 பேர் கைது 

ஒருவரை தாக்கிய 2 பேர் கைது 

விழுப்புரம் : வளவனுார் அருகே சிறுநீர் கழித்தவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.விழுப்புரம் அடுத்த ஏ.கே.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தமிழழகன், 45; இவர், கடந்த 23ம் தேதி, வளவனுாரில் உள்ள தனது நண்பர் மோகன் என்பவரின் சைக்கிள் கடைக்கு சென்றிருந்தார்.அப்போது, சைக்கிள் கடைக்கு அருகே உள்ள பகுதியில் தமிழழகன் சிறுநீர் கழித்துள்ளார். அங்கிருந்த, அப்பகுதியைச் சேர்ந்த சரவணன், 47, அரிகிருஷ்ணன், 21, ஆகாஷ், 18; ஆகியோர் தமிழழகனை தாக்கியுள்ளனர்.புகாரின் பேரில், வளவனுார் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிந்து, சரவணன், அரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை