மேலும் செய்திகள்
மதுபாட்டில் கடத்திய 4 பேர் கைது
05-May-2025
வானுார் : புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கிளியனுார் போலீசார் நேற்று புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பையுடன் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், புதுச்சேரி மதுபாட்டில் கடத்தி வந்தது தெரிய வந்தது.விசாரணையில், காஞ்சிபுரம் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விநாயகமூர்த்தி மகன் சிவக்குமார், 23; உத்தரராஜன் மகன் மோகன், 27; என்பதும், தனது ஊரில் விற்பதற்காக புதுச்சேரி மாநிலம், சேதராப்பட்டில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி வந்து, பஸ்சுக்காக காத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
05-May-2025