உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீடு புகுந்து திருடிய வழக்கில் 2 பேர் கைது

வீடு புகுந்து திருடிய வழக்கில் 2 பேர் கைது

விக்கிரவாண்டி : கெடார் அருகே வீடு புகுந்து திருடிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கெடார் அடுத்த வாழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், 45; கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்குச் சென்றிருந்தார்.திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த ஒரு சவரன் நகை, 23 ஆயிரம்ரூபாய் பணம் திருடுபோனது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த மணி மகன் மகாலிங்கம், 19; தர்மன் மகன் ஜெயக்குமார், 22; ஆகியோர் திருடியது தெரியவந்தது.மேலும், இவர்கள், அதே ஊரைச்சேர்ந்த அருணாசலம், 43; என்பவர் வீட்டில் கடந்த 3ம் தேதி திருடியதையும் ஒப்புக் கொண்டனர்.அவர்களிடமிருந்து ஒரு சவரன் நகை மற்றும் 23 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ