உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா வழக்கில் மேலும் 2 பேர் கைது

குட்கா வழக்கில் மேலும் 2 பேர் கைது

வானுார்: வானுார் அருகே குட்கா வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.கடந்த சில தினங்களுக்கு முன், மயிலம் ரோட்டில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மினி வேனில் குட்கா கடத்தி வந்த சேதராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அருள், 45; அவர் கொடுத்த தகவலின் பேரில், மயிலம் ரோட்டில் கடை நடத்தி வரும் ஆகாசம்பட்டு ரமேஷ், 45; ஆகிய 2 பேரை கைது செய்து, பதுக்கி வைக்கப்பட்ட 550 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.இருவரிடமும் நடத்திய விசாரணையில், வாலாஜாபேட்டையைச் சேர்ந்த கணேஷ், 30; முத்துக்குமார், 27; ஆகியோரிடம் குட்கா வாங்கியது தெரிய வந்தது. அதன் பேரில் குட்கா சப்ளை செய்த கணேஷ், முத்துக்குமார் ஆகிய இருவரையும் வாலாஜாபேட்டையில் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை