உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தங்கை கணவரை வெட்டிய வழக்கறிஞருக்கு 2 ஆண்டு சிறை

தங்கை கணவரை வெட்டிய வழக்கறிஞருக்கு 2 ஆண்டு சிறை

விழுப்புரம்: குடும்பத் தகராறில், தங்கை கணவரை வெட்டிய வழக்கறிஞருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.விழுப்புரம் அடுத்த கோனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பாவாடை மகன் தேவன்,32; பஸ் டிரைவர். இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த வைத்திலிங்கம் மகள் சரிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தேவன் வேலைக்கு செல்லாததால், சரிதா திருப்பூருக்கு சென்று வேலை செய்து கஷ்டப்படுவதாக, தனது பெற்றோரிடம் அழுதபடி கூறினார்.அதனையொட்டி, கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி சரிதாவின் தந்தை வைத்திலிங்கம், 60; வழக்கறிஞரான அவரது அண்ணன் கலியபெருமாள், 43; ஆகியோர் தேவனை தட்டிக் கேட்டனர். அதில் ஏற்பட்ட தகராறில், வைத்திலிங்கம், கலியபெருமாள் ஆகியோர் கத்தியால் வெட்டியதில் தேவன் படுகாயமடைந்தார்.இதுகுறித்து தேவன் அளித்த புகாரின் பேரில் வைத்திலிங்கம், கலியபெருமாள் ஆகியோரை கைது செய்த காணை போலீசார், இருவர் மீதும் விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் கொலை முயற்சி வழக்கு தொடர்ந்தனர்.வழக்கு விசாரணையின்போது வைத்திலிங்கம் இறந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயப்பிரகாஷ், குற்றம் சாட்டப்பட்ட கலியபெருமாளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.தண்டனை குறித்து மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை