மேலும் செய்திகள்
மனைவி, மகன் மாயம் கணவர் புகார்
10-Mar-2025
விழுப்புரம்; வளவனூர் அருகே பெண்ணை தவறாக பேசிய முன் விரோத தகராறில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த சின்னதுரை மகன் ராஜி, 35; இவர், பக்கத்து வீட்டை சேர்ந்த இளங்கோவனின் மனைவி பற்றி, தவறாக பேசி வந்துள்ளதாக தெரிகிறது. இதனை இளங்கோ, நேற்று முன்தினம் ராஜியிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ராஜி, அவரது நண்பர்கள் சிலம்பரசன்,40; ஆனந்து 31; ஆகியோர், இளங்கோவனை திட்டி, மிரட்டியுள்ளனர்.இது குறித்து, இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து, ராஜி உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர்.
10-Mar-2025