உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மழையில் அடித்து செல்லப்பட்ட 3 லட்சம் சவுக்கு நாற்றுகள்

மழையில் அடித்து செல்லப்பட்ட 3 லட்சம் சவுக்கு நாற்றுகள்

வானுார்: காட்ராம்பாக்கம் டி.என்.பி.எல்., நிறுவனத்தில் விற்பனைக்கு தயாராக இருருந்த 3 லட்சம் சவுக்கு நாற்றுகள் மழையில் அடித்து செல்லப்பட்டன. புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலை, காட்ராம்பாக்கத்தில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டி.என்.பி.எல்.,) சார்பில் கூழ்மர (சவுக்கு) நாற்றுப்பண்ணை இயங்கி வருகிறது. இங்கு சவுக்கு நாற்றுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, 80 நாட்கள் வளர்ந்த சவுக்கு நாற்றுகள், பிளாஸ்டிக் டிரேக்களில் தயார் நிலையில் இருந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையில், சவுக்கு நாற்றுகள் தண்ணீரில் 300 அடி துாரத்திற்கு அடித்துச் செல்லப்பட்டு சாலையோரம் சிதறி கிடந்தன. நேற்று காலை இவற்றை, டி.என்.பி.எல்., ஊழியர்கள் மீட்டனர். டி.என்.பி.எல்., அதிகாரி கூறுகையில், 'விவசாயிகளுக்கு வழங்க 40 லட்சம் சவுக்கு நாற்றுகளை பண்ணையில் தயார் நிலையில் வைத்திருந்தோம். கனமழையில், அடித்து செல்லப்பட்ட நாற்றுகளை குறிப்பிட்ட அளவில் மட்டுமே மீட்க முடிந்தது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை