உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மது பாட்டில் விற்ற 3 பேர் கைது

மது பாட்டில் விற்ற 3 பேர் கைது

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே மது பாட்டில் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் சரவணம்பாக்கம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சிவசங்கர், 31; விநாயகமூர்த்தி, 39; ஆகிய இருவரையும் கைது செய்து, 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதேபோல் காந்திகுப்பம் காலனி பகுதியில் மது பாட்டில் விற்ற அய்யனார் மனைவி வளர்மதி, 46; என்பவரை கைது செய்து, 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை