உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வழிப்பறி ஆசாமிகள் உட்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வழிப்பறி ஆசாமிகள் உட்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

விழுப்புரம் : வழிப்பறி மற்றும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்குகளில் தலா இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்தர் முகமது இப்ராஹிம், 37; இவர், மொபைலில் வந்த விளம்பரத்தை நம்பி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி குறைந்த விலையில் தங்கம் வாங்க காரில் வந்தபோது, விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த சொக்கநந்தல் கிராமம் அருகே மர்ம கும்பல் காரை மறித்து, முகமது இப்ராஹிம் வைத்திருந்த ரூ.7.6 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்றது.சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, வழிப்பறி கும்பலை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த கும்பலை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பன்னீர்செல்வம், 44; சீனிவாசன் (எ) துரை, 44; ஆகியோர் கடந்த வாரம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.அதேகும்பலை சேர்ந்த ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை சையத் நகர் பாதுஷா மகன் அலாவுதீன்,32; செஞ்சி அடுத்த வேலன்தாங்கல் சகாயராஜ் மகன் செல்வகுமார், 44; ஆகியோரை, எஸ்.பி., தீபக் சிவாச் பரிந்துரையை ஏற்று குண்டர் சட்டத்தல் கைது செய்ய கலெக்டர் பழனி நேற்று உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர். இதுதொடர்பாக சாராய வியாபாரிகள், மெத்தனால் சப்ளையர்கள் என 24 பேரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். அவர்களில், கள்ளக்குறிச்சி அடுத்த சேஷசமுத்திரம் ராமு மகன் வேலு, 43; சென்னை கவுதம்சந்த் ஜெயின்,50; ஆகியோரை, சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., வினோத் சாந்தாராம் பரிந்துரையை ஏற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில், ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார்.இந்த உத்தரவு நகல்களை கடலுார் மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் சத்தியமங்கலம் மற்றும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று வழங்கினர். கள்ளக்குறிச்சி கள்ளசாராய வழக்கில், கைதாகியுள்ள 24 பேரில், 18 பேர் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை