உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் 4 மையத்தில் நீட் தேர்வு 4,056 மாணவ, மாணவியர் பங்கேற்பு

விழுப்புரத்தில் 4 மையத்தில் நீட் தேர்வு 4,056 மாணவ, மாணவியர் பங்கேற்பு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 4 மையங்களில் நடந்த நீட் தேர்வில் 4,056 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு விழுப்புரம் மாவட்டத்தில், அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளி, காகுப்பம் அரசு பொறியியல் கல்லுாரி, அண்ணா அரசு கலை கல்லுாரி, எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரி ஆகிய 4 மையங்களில் நடந்தது. இதில், 1,300 மாணவர்கள், 2,877 மாணவிகள் என மொத்தம் 4,177 பேர் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நேற்று 4,056 பேர் தேர்வெழுதினர். 121 பேர் ஆப்சென்ட் ஆகினர்.காலை 11:30 மணி முதல் மாணவ, மாணவியர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையம் வந்த மாணவ, மாணவிகள் தீவிர சோதனைக்கு பின் ஹால்டிக்கெட், ஆதார், இரு போட்டோ மற்றும் ஒரு வாட்டர் பாட்டிலுடன் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பயோமெட்ரிக் வருகை பதிவு செய்யப்பட்டது.மதியம் 1:30 மணிக்கு தேர்வு மையங்களின் கேட் மூடப்பட்டது. 2:00 மணிக்கு துவங்கிய நீட் தேர்வு மாலை 5:20 மணி வரை நடந்தது. மாணவர்களோடு வந்த பெற்றோர்கள் வெயில் தாக்கத்தில் அவதிப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில், தேர்வு மையம் அருகில் அமர்வதிற்கு தனி இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாணவிக்கு அனுமதி மறுப்பு

விழுப்புரம் அண்ணா அரசு கலை கல்லுாரி நீட் தேர்வு மையத்தில் உளுந்துார்பேட்டையைச் சேர்ந்த ஷாங்கினி என்ற மாணவி மதியம் 1:51 மணிக்கு தாமதமாக வந்தார்.பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்திற்கு பதில், ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம் மாற்றி கொண்டு வந்ததால், அதனை மாற்றி கொண்டுவரவும், ஆட்டோ ஓட்டுநர் தேர்வு மையத்தை மாற்றி இறக்கி விட்டதால் தாமதம் ஏற்பட்டது என கூறினார். தேர்வு மையத்தின் கதவு பூட்டப்பட்டு விட்டதால், அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மாணவி ஷாங்கினி தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை