| ADDED : நவ 24, 2025 05:47 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டிய 5 பேர் கைது செய்து, பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டும் நபர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி நெடுஞ்சாலை, நான்கு முனை சிக்னலுக்கு அருகே அதிவேகமாக பைக் ஓட்டி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே டி.ஒரத்துார் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் விஸ்வநாத், 25; என்பவரை கைது செய்து, பைக் பறிமுதல் செய்தனர். அதே போல், சங்கீதமங்கலம் கூட்ரோடு அருகே அதிவேகமாக பைக் ஓட்டி வந்த விக்கிரவாண்டி அருகே ஏழுசெம்பொன் கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் ரமேஷ், 25; கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், சின்னகோட்டகுப்பத்தில் அதிவேகமாக பைக் ஓட்டி வந்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டை சேர்ந்த நடராஜ் மகன் சந்துரு,19; என்பவரைகைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் கே.கே., ரோடு பகுதியில் அதிவேகமாக பைக் ஓட்டி வந்த காவணிப்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ், 40; என்பவர் மீது வழக்குப் பதிந்து பிரகாஷை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். இதேபோல் வடக்கு ரயில்வே காலனியில் அதிவேகமாக பைக் ஓட்டி வந்த வி.மருதுாரை சேர்ந்த ரவிக்குமார், 29; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.