உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிராவல் மண் கடத்திய 6 பேர் கைது

கிராவல் மண் கடத்திய 6 பேர் கைது

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே கிராவல் மண் கடத்திய 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து 6 பேரை கைது செய்தனர்.விழுப்புரம் டி.எஸ்.பி., தனி பிரிவு போலீசார் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.புதுப்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில், கிராவல் மண் ஏற்றி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.மேலும், கிராவல் மண் கடத்திய திருக்கோவிலுார், சின்னவெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் சரவணன், 25; சங்கர் மகன் ஐயப்பன், 20; உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை