உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சூதாடிய 8 பேர் கைது

 சூதாடிய 8 பேர் கைது

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே காசு வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ராதாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அரசு மருத்துவ மனைக்கு பின்புறம் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டராதாபுரத்தை சேர்ந்த வசந்தராஜ்,33:அசோகன்,54:விழுப்புரம் விக்னேஷ்,30:கலிதீர்த்தாள் குப்பம் ஜனார்த்தனம்,38:மண்ணாடிப்பட்டு ஜெயபிரகாஷ்,45: கடையப்பட்டு சிவராமன்,48:வெட்டுக்காடு சத்தியராஜ்,40:மூங்கீல்பட்டு தீபன்,30: ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரொக்கம் ரூபாய் ஆயிரம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை