உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தி.மு.க., தேர்தல் பணியில் 87 வயது தொண்டர் ஆர்வம்

 தி.மு.க., தேர்தல் பணியில் 87 வயது தொண்டர் ஆர்வம்

விழுப்புரம்: கண்டமங்கலம் அடுத்த நவமால்காப்பேர் காலனியில், வாக்காளர் பட்டியல் கணக் கெடுப்பு பணி நடைபெற்றது. இப்பணியை, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கண்டமங்கலம் மத்திய ஒன்றிய செயலாளர் சீனுசெல்வரங்கம், ஒன்றிய கவுன்சிலர் கலைராஜன், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் காசிநாதன், ராம்குமார், கிளை செயலாளர் முனுசாமி உடனிருந்தனர். இதில், நவமால்காப்பேரைச் சேர்ந்த 87 வயது தி.மு.க., தொண்டர் அய்யனாக்கண்ணு கலந்து கொண்டு, மொழிப் போராட்டத்தில் பங்கேற்று, முன்னாள் முதல்வர் அண்ணாதுரையுடன், தான் சிறைக்கு சென்றதை பெருமையுடன் குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ