உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணியம்பட்டில் ரூ.9 கோடியில் புதிய பாலம்; 30 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்

மணியம்பட்டில் ரூ.9 கோடியில் புதிய பாலம்; 30 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்

செஞ்சி: கொங்கரப்பட்டு- மணியம்பட்டு இடையே சங்கராபரணி ஆற்றில் 9 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்ட பணிகள் துவக்க விழா நடந்தது.வல்லம் ஒன்றியம் கொங்கரப்பட்டு-மணியம்பட்டு கிராமங்கள் இடையே சங்கராபரணி ஆறு செல்கிறது. இதில் தரைப்பாலம் கூட இன்றி ஆற்று மணலில் பொது மக்கள் கடந்து சென்று வந்தனர். வெள்ளம் ஏற்படும் போது மணியம்பட்டு கிராம மக்கள் பல கி.மீ., துாரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனால் மழை காலங்களில் மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். பொது மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.இங்கு பாலம் அமைக்க 30 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது, ரூ 9.10 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டும் பணி துவக்க விழா நடந்தது. ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். மயிலம் தொகுதி சிவக்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் காசிம்மாள் முனுசாமி வரவேற்றார்.மஸ்தான் எம்.எல்.ஏ., பணிகளை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, பி.டி.ஓ., ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் அன்புராஜ், உதவி செயற்பொறியாளர் முருகானந்தம், ஒன்றிய கவுன்சிலர்கள் பிரேம்சாந்தி, முருகன், லட்சுமி, துணை தலைவர் சரண்யா நாகசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை