உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் ஆண் உடல் திண்டிவனம் அருகே போலீஸ் விசாரணை

தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் ஆண் உடல் திண்டிவனம் அருகே போலீஸ் விசாரணை

திண்டிவனம் : திண்டிவனம் அருகே கொலை செய்து, தீ வைத்து எரிக்கப்பட்ட நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர், கரிக்கம்பட்டு கிராம ஏரிப்பகுதியில் விழல் சூழ்ந்துள்ள பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. தகவலறிந்த விழுப்புரம் எஸ்.பி., தீபக் சிவாச், டி.எஸ்.பி., சுரேஷ் பாண்டியன், ஒலக்கூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, எரிந்த நிலையில் கிடந்த உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.இறந்தவர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. அவரை, வேறு எங்காவது கொலை செய்து, நேற்று முன்தினம் நள்ளிரவு ஏரிக்கரையில் அவசர அவசரமாக தீ வைத்து விட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்தில் தடய அறிவியல் பிரிவு ராஜிவ் தடயங்களை சேகரித்தார்.உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.கொலையாளிகளைப் பிடிக்க எஸ்.பி., உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து கம்பூர் வி.ஏ.ஓ., பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி