உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவர்கள் மூன்று நாள் இயற்கை சூழல் சுற்றுலா

மாணவர்கள் மூன்று நாள் இயற்கை சூழல் சுற்றுலா

செஞ்சி : விழுப்புரம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த செஞ்சி, செவலபுரை, நொச்சலுார் உள்ளிட்ட 6 பள்ளிகளை சேர்ந்த தேசிய பசுமைப்படை மாணவர்கள் 50 பேர், ஒருங்கிணைப்பாளர்கள் 10 பேர் தேசிய பசுமைப்படை சார்பில் 3 நாள் இயற்கை சூழல் சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தனர். இவர்கள் செஞ்சி கோட்டை, கழுவேலி, ஊசுட்டேரி, புத்துப்பட்டு, திருவக்கரை உள்ளிட்ட இடங்களை பார்வையிடுகின்றனர். செஞ்சியில் இருந்து தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் புறப்பட்ட குழுவினரை பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி கொடியசைத்து வழி அனுப்பினார். இந்நிகழ்ச்சியின் போது ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், பேரூராட்சி கவுன்சிலர் கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை