ஏ.பி.டி., நெக்சா மாருதி கார் ஷோரூம் திறப்பு விழா
விழுப்புரம் : விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை, சிக்னல் அருகே ஏ.பி.டி., நெக்சா புதிய மாருதி கார் ஷோரூம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.விழாவிற்கு, எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கி, புதிய ஷோரூமை திறந்து வைத்தார். ஏ.பி.டி., மாருதி நிர்வாக இயக்குனர் ஹரிஹரசுதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக, மாருதி சுசுகி மேலாளர் சித்திக் கலந்து கொண்டார். இதில், ஏ.பி.டி., மாருதி மனிதவள மேலாளர் சண்முகநாதன், பொது மேலாளர்கள் விஜயகுமார், கணேசன், அப்பு, கடலுார் விற்பனை பிரிவு தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.