மேலும் செய்திகள்
புதிய வகுப்பறை கட்டடம் அடிக்கல் நாட்டு விழா
16-Dec-2024
கண்டமங்கலம்,; சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகள் துவங்கியது.கண்டமங்கலம் ஒன்றியம், சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுப்பணித்துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.41 கோடி செலவில் 6 புதிய வகுப்பறைக் கட்டடங்களுக்கான கட்டுமான பணி தொடங்கியது.விழாவிற்கு பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் ராஜவேல், ஒன்றிய கவுன்சிலர் தண்டபாணி முன்னிலை வகித் தனர். பள்ளி தலைமையாசிரியர் ராமநாதன் வரவேற்றார்.ஒன்றிய சேர்மன் வாசன் தலைமையேற்று 6 பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க., செயலாளர் கணேசன், ஊராட்சி தலைவர்கள் மதியழகன், ஆதிநாராயணன், ஒப்பந்ததாரர் சத்தியபாலன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
16-Dec-2024