மேலும் செய்திகள்
மழைநீர் வடிகால் பணி எம்.எல்.ஏ., ஆய்வு
29-Oct-2025
திண்டிவனம்: திண்டிவனத்தில் வாக்காளர் திருத்த பணிகள் குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, நகர செயலாளர் தீனதயாளன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர் பாலசுந்தரம், எம்.ஜி.ஆர்., மன்ற துணைத் தலைவர் ஏழுமலை, ஜெ.,பேரவை நிர்வாகிகள் விஜயகுமார், ரூபன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், கவுன்சிலர் ஜனார்த்தனன், முன்னாள் கவுன்சிலர் செந்தில், நிர்வாகிகள் தினேஷ், கார்த்திக், பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், நடைபெற உள்ள வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள், அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
29-Oct-2025