மேலும் செய்திகள்
முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா
16-Sep-2025
விழுப்புரம்: கோலியனுார் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலையம்பாளையம், அத்தியூர் திருவாதி ஊராட்சிகளில் அ.தி.மு.க., சார்பில் தி.மு.க., ஆட்சியை கண்டித்து கண்டன தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் விஜயா சுரேஷ்பாபு, ஒன்றிய மாணவரணி செயலாளர் பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பேச்சாளர் பேராவூரணி திலீபன் சிறப்புரையாற்றினார். அவை தலைவர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் அமுதா கணேசன், கிளை செயலாளர்கள் பாலமுருகன், அருணகிரி, பாஸ்கரன், ராஜசேகர், ரவி, கிருஷ்ணமூர்த்தி, சந்தோஷ் உட்பட ஒன்றிய, மாவட்ட, கிளை, மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
16-Sep-2025