மேலும் செய்திகள்
தேனியில் ஆர்ப்பாட்டம்
31-Oct-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யு.சி) ஆயத்த மாநில மாநாடு நடந்தது. நகராட்சி திடலில் நடந்த மாநாட்டிற்கு சங்க மாநில துணைத் தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பொன்னன் வரவேற்றார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலர் சவுரிராஜன் துவக்க உரையாற்றினார். ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, ஊரக வளர்ச்சித்துறை தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி, மாநில பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். மாநாட்டில், தமிழகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வரும் டிசம்பர் 8ம் தேதி மாநிலம் தழுவிய தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலிருந்தும் துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
31-Oct-2025