உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மதுபாட்டில் கடத்தியவர் கைது..

மதுபாட்டில் கடத்தியவர் கைது..

திண்டிவனம்,: வெள்ளிமேடுபேட்டை அருகே, மது பாட்டில் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். சுதந்திர தினமான நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை 11:00 மணியளவில், வெள்ளிமேடு பேட்டை சப் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் போலீசார் தாதாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ததில் 80 மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், 35; என தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி