உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  திண்டிவனத்தில் அனைத்து கட்சி கூட்டம்

 திண்டிவனத்தில் அனைத்து கட்சி கூட்டம்

திண்டிவனம்: திண்டிவனம் சப் கலெக்டர் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் இன்று 27ம் தேதி, நாளை 28ம் தேதி ஆகிய 2 நாட்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம் நடக்கிறது. தொடர்ந்து வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் வராத வாக்காளர்களை அழைத்து வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக நேற்று காலை சப் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சப் கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். தி.மு.க., நகர துணை செயலாளர் கவுதமன், அ.தி.மு.க., நகர செயலாளர் ரூபன்ராஜ், முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், பா.ஜ., கோட்ட பொறுப்பாளர் எத்திராஜ், தே.மு.தி.க., நகர செயலாளர் காதர்பாஷா உட்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை