அலுமினிய ஒயர் திருட்டு
அவலுார்பேட்டை : தாயனுார் மின் நிலையத்தில் அலுமினிய ஒயர்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேல்மலையனுார் அடுத்த தாயனுார் மின் நிலையத்தில் 2 ம் தேதி இரவு மர்ம நபர்கள் 25 கிலோ அலுமினிய ஒயர்கள் திருடி சென்றனர். உதவி மின் பொறியாளர் சுமதி அளித்த புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.