உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ஞானானந்தா பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 ஞானானந்தா பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், ஞானானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் துவக்க ஆண்டான 1976ம் ஆண்டு பேட்ச் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிந டந்தது. திருக்கோவிலுாரில் ஞானானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 1976ம் ஆண்டு 5 மாணவர்களுடன் துவங்கப்பட்டது. இப்பள்ளியில் இருந்து பல டாக்டர்கள், இன்ஜினியர்கள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., என உருவாக்கி பள்ளி உயர்ந்து நிற்கிறது. பள்ளியின் துவக்க ஆண்டான 1976ம் ஆண்டு முதல் பேட்ச்சாக சேர்ந்த மாணவர்களை ஒருங்கிணைத்து, முன்னாள் மாணவர் அமைப்பின் சார்பில் பள்ளி வளாகத்தில்சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் அஞ்சனவண்ணன் வரவேற்றார். தாளாளர் முகில்வண்ணன் தலைமை தாங்கினார். டாக்டர் புவனேஸ்வரி, டாக்டர் ஸ்ரீதேவி நாச்சியார் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் அமைப்பைச் சேர்ந்த ஆண்டாள் நாச்சியார் சேகர் பள்ளி பருவ கால நினைவுகள் குறித்து நெகிழ்ச்சியுடன் கருத்துகளை பரிமாறிக் கொண்டார். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த லண்டனில் வசிக்கும் யுவராஜ் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் பள்ளி பருவத்தில் தங்களின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்களிப்பு, பள்ளியின் நிறுவனரும், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., வுமான சுந்தரம் மற்றும் காந்தி ஆகியோர் அளித்த பங்களிப்பு குறித்துகூறினர். பள்ளியின் முதல் முதல்வர் கல்யாணி ஸ்ரீனிவாசனின் உரையை முன்னாள் மாணவர் சென்னையில் வசிக்கும் வெங்கடேஷ் வாசித்தார். கீதாகோபி சிகாமணி உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் இந்நாள் மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆண்டாள் நாச்சியார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ