மேலும் செய்திகள்
காடாம்புலியூரில் பா.ம.க., செயற்குழு கூட்டம்
15-Sep-2024
செஞ்சி: பா.ம.க., தலைவர் அன்புமணி பிறந்த நாளை முன்னிட்டு நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் கொடியேற்றி அன்னதானம் வழங்கினர். செஞ்சி செல்வி திருமண மண்டபத்தில் பொது மருத்துவ முகாமும், அரசு போக்குவரத்து பணிமனையில் கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், தொழிற்சங்க மண்டல பொது செயலாளர் தங்க குப்புசாமி ஆகியோர் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் கோபால், மாவட்ட துணை செயலாளர் சேட்டு, ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார், அறவாழி ஆகியோர் வரவேற்றனர்.மாவட்ட செயலாளர் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் கொடியேற்றி, அன்னதானம் வழங்குவதையும், மருத்துவ முகாமையும் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் மாவட்ட தலைவர் கணல் பெருமாள், மாவட்ட துணை செயலாளர்கள் அய்யனார், ஒன்றிய செயலாளர்கள் அரிகிருஷ்ணன், பாண்டியன், சக்கரவர்த்தி, பொருளாளர் பாலசிவக்குமார், நகர செயலாளர் சின்னதம்பி, நிர்வாகிகள் மணிமாறன், செல்வமணி, அப்பாவு, கண்ணாயிரம், முனுசாமி, வேலுசாமி, தொழிசங்க நிர்வாகிகள் பூவராகவன், ஆறுமுகம், பூபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
15-Sep-2024