உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில் தற்செயல் தேர்தல் நடத்த ஏற்பாடு

மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில் தற்செயல் தேர்தல் நடத்த ஏற்பாடு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் நடக்கவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்ட காலியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில், ஒலக்கூர் ஒன்றியம் தவிர்த்து 12 ஒன்றியங்களில் 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 8 கிராம ஊராட்சி தலைவர்கள், 46 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்கள் காலியாக உள்ளது. இந்த தற்செயல் தேர்தலுக்கு புகைபடத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் கால அட்டவணையின்படி, நேற்று முன்தினம் சம்பந்தபட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், பி.டி.ஓ.,க்கள் மூலம் தொடர்புடைய கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் வெளியிடப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி