உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கலைக்கல்லுாரியில் கலைத்திருவிழா

அரசு கலைக்கல்லுாரியில் கலைத்திருவிழா

வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கலைத்திருவிழா வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழக அரசு உயர்கல்வித்துறை சார்பில் வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2025-26ம் ஆண்டுக்கான கல்லுாரி கலை திருவிழா நடந்தது. கலையால் கல்வி செய்வோம் என்ற மையக்கருத்துடன் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் விதமாக இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட, இந்த போட்டிகள் மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கும் விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அகஸ்டின் ஜார்ஜ் செல்லம்மாள் வரவேற்றார். கலைத்திருவிழா போட்டி நடத்தி, பரிசுகள் வழங்கிட ஒவ்வொரு கல்லுரிக்கு ரூ. 2 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். நுண்கலைப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் குணசேகரி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளர் தேவநாதன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ