வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆட்டோ ஷேர் ஆட்டோ காரங்க நல்லா கவனிச்சிருக்காங்க
மேலும் செய்திகள்
இரவு நேரத்தில் பஸ்கள் நிற்காமல் செல்வதால் அவதி
31-Oct-2024
திண்டிவனம்: சென்னையிலிருந்து திருவண்ணாமலை மற்றும் திருவண்ணாமலையிலிருந்து சென்னை செல்லும் அரசு பஸ்கள் திண்டிவனத்தில் நிற்காமல் செல்வதால் பயணிகள் பெரிதும் அவதியடைகின்றனர்.சென்னை-திருச்சி மார்க்கத்தில், திண்டிவனம் மையப்பகுதியாக உள்ளது. பல்வேறு மார்க்கத்திலருந்து வரும் அரசு பஸ்கள் அனைத்தும் திண்டிவனத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.ஆனால் சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் மற்றும் திருவண்ணாமலையிலிருந்து சென்னை செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும் திண்டிவனம் நகருக்கு வராமல் புறவழிச்சாலை வழியாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. சென்னையிலிருந்து திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், திண்டிவனம் -சென்னை சாலையிலுள்ள சலவாதி கூட்ரோடு வழியாக திரும்பி, கல்லுாரி புறவழிச்சாலை வழியாக சந்தை மேடு கூட்ரோட்டை கடந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலை செல்கின்றது. இதே போல் திருவண்ணாமலையிலிருந்து சென்னை செல்லும் அரசு பஸ்கள் திண்டிவனம் நகரத்திற்கு வராமல் நகர எல்லையிலுள்ள சந்தைமேடு வழியாக திருப்பி, கல்லுாரி புறவழிச்சாலை வழியாக சலவாதி கூட்ரோட்டை கடந்து சென்னை செல்கின்றது. மேற்கண்ட இரண்டு மார்க்கத்திலிருந்து வரும் அரசு பஸ்கள், திண்டிவனத்திற்கு வரும் பஸ் பயணிகளை, சந்தைமேடு கூட்ரோட்டிலிலேயே இறக்கிவிட்டு செல்கின்றது. இதனால் பயணிகள் அங்கிருந்து டவுன் பஸ் மற்றும் ேஷர் ஆட்டோக்களை பிடித்து திண்டிவனம் நகருக்கு வரவேண்டியுள்ளது. இதில் சென்னையிலிருந்து செல்லும் அரசு பஸ்கள் பெரும்பாலனவை திண்டிவனத்திற்கு வரும் பயணிகளை ஏற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதே போல் திருவண்ணாமலையிலிருந்து சென்னை செல்லும் பஸ்சில், திண்டிவனத்திற்கு வரும் பயணிகளை பெரும்பாலான பஸ்களில் ஏற்றுவதில்லை. அப்படி ஏற்றினாலும், சந்தைமேடு கூட்ரோட்டிலேயே இறக்கிவிடுகின்றனர். திண்டிவனத்திற்கு வரும் பயணிகளை, பஸ் நிலையத்திற்கு வராமல் புறவழிச்சாலையிலேயே இறக்கிவிட்டு செல்வுது, குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவத்தும், தொடர்ந்து பயணிகளை திண்டினவத்தில் இறக்கிவிடாமல் செல்வது தொடர் கதையாக நடந்து வருகின்றது. திண்டிவனத்திலிந்து புதுச்சேரி செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும், புறவழிச்சாலையில் செல்லாமல், வழியிலுள்ள கிளியனுாருக்கு உள்ளே சென்று புதுச்சேரிக்கு செல்கின்றன. திருவண்ணாமலைக்கு செல்லும் அரசு பஸ்கள் திண்டிவனம் நகரத்திற்கு வராமல் செல்வது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் பொருட்டு, போக்குவரத்து கழக அதிகாரிகள், சென்னை மற்றும் திருவண்ணாமலை மார்க்கத்திலிருந்து வரும் அரசு பஸ்களின் பயணம் செய்யும், பயணிகள் திண்டிவனம் பஸ் நிலையத்தில் இறக்கிவிட நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
திண்டிவனம் நகருக்குள் வராமல் புறவழிச்சாலையில் செல்லும் அரசு பஸ்கள் குறித்து, திண்டிவனம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுந்தர்ராஜ் கூறியதாவது: திண்டிவனம் முக்கிய நகரமாக உள்ளது. தொலை துாரத்திலிருந்து வரும் பஸ்கள் அனைத்தும் திண்டிவனத்திலுள்ள பஸ் நிலையத்திற்கு வந்து, பயணிகளை இறக்கிவிட்டு செல்ல வேண்டும். புறவழிச்சாலை வழியாக பஸ்களை இயக்க கூடாது. அப்படி சென்றால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
ஆட்டோ ஷேர் ஆட்டோ காரங்க நல்லா கவனிச்சிருக்காங்க
31-Oct-2024