உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாலிபர் மீது தாக்குதல்; போலீஸ் விசாரணை

வாலிபர் மீது தாக்குதல்; போலீஸ் விசாரணை

விழுப்புரம் : விழுப்புரத்தில் முன்விரோத தகராறில் மதுபாட்டிலால் வாலிபர் தாக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம், தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகன் சஞ்சய்குமார், 21; கீழ்ப்பெரும்பாக்கம் சன்சிட்டி நகர் ஆனந்த் மகன் புவனேஷ்வர், 20; இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் விழுப்புரம் ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகே அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சஞ்சய்குமார், புவனேஷ்வரை பீர் பாட்டிலால் தாக்கினர். காயமடைந்த புவனேஷ்வர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் சஞ்சய்குமார் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை