உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மாவட்ட கோ கோ விளையாட்டில் அத்தியூர் திருக்கை பள்ளி முதலிடம்

 மாவட்ட கோ கோ விளையாட்டில் அத்தியூர் திருக்கை பள்ளி முதலிடம்

விக்கிரவாண்டி: அத்தியூர் திருக்கை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோகோ விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்து மாநிலப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி ஓமந்தூர் தனியார் பள்ளியில் நடைபெற்றது இப்போட்டியில் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் +1 படிக்கும் மாணவ மாணவிகள் 17 வயது முதல் 19 வயது பிரிவில் கோகோ விளையாட்டில் பங்கேற்று முதலிடம் பெற்றனர். 10 ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் 14 வயது பிரிவில் கோகோ விளையாட்டில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பெற்றனர். அனைவரும் திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ரவிசங்கர் ,உதவி தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் சரவணன் மற்றும்பள்ளி ஆசிரியர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ