உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  போலீஸ்காரரை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் மறியல்

 போலீஸ்காரரை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் மறியல்

கோட்டக்குப்பம்:கோட்டக்குப்பத்தில் விபத்து ஏற்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அளித்த புகாரை ஏற்க மறுத்த போலீசாரை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆபிதீன். ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று காலை இசிஆரில் இருந்து புதுச்சேரி நோக்கி ஆட்டோ ஓட்டிச்சென்றார். கோட்டகுப்பம் ரவுண்டானா அருகில் சென்றபோது, எதிர் திசையில் ஒரு வழிப்பாதையில் பைக்கில் வந்த நபர், அந்த ஆட்டோ மீது மோதியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ்காரர் ஒருவர், பாதிக்கப்பட்ட ஆபிதீனை ஒருமையில் தகாத வார்த்தையால் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆபிதீன், சக ஆட்டோ ஓட்டுநர்களுடன் கோட்டக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் திரண்டனர். பின் ஆபிதீன், போலீஸ்காரர், தன்னை தகாத வார்த்தையால் பேசியதாகவும், புகாரை வாங்க மறுப்பதாகவும் போலீசில் புகார் அளித்தார். பின், அனைவரும் கோட்டக்குப்பம் போலீசாரை கண்டித்து போலீஸ் ஸ்டேஷன் எதிரில் மறியலில் ஈடுப்பட்டனர். சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களை கோட்டக்குப்பம் போலீசார் சமரசம் செய்து, அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை