மேலும் செய்திகள்
மின்சார வாரிய தொழிலாளர் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
2 minutes ago
28ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
3 minutes ago
விழுப்புரம்: வானுார் தி.மு.க., ஒன்றிய செயலாளர் மீது அ.தி.மு.க., திட்டமிட்டு வீண்பழி சுமத்துவதாக லட்சுமணன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். விழுப்புரம் தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை; வானுார் மேற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் மீது, அவதுாறு பரப்புவோருக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். தோல்வி பயத்தால் அ.தி.மு.க., பழனிசாமி, திண்டிவனம் சண்முகம் ஆகியோர் தி.மு.க., ஒன்றி செயலாளர் மீது திட்டமிட்டு வீண்பழி சுமத்தும் செயலை தி.மு.க., கண்டிக்கிறது. ஒன்றிய செயலார் பாஸ்கர் மீது வீசும் பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. முழுமையாக விசாரணை நடத்தி உண்மையை உறுதி செய்திருக்கிறோம். வீண்பழி சுமத்தியவர்கள் மீது, உடனடியாக அவதுாறு வழக்கு தொடரப்படும். போலீசிலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2 minutes ago
3 minutes ago