உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு பிரசாரம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில், சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. போக்குவரத்து காவல்துறை சார்பில், டோல் பிளாசாவில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்கு இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமை தாங்கினார். இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ் , லோகநாதன் ஆகியோர் இரு சக்கர வாகன ஓட்டிகளிடையே ஹெல்மெட் முக்கியத்துவம், சாலை விதிகள் குறித்து விளக்கமளித்து பிரசாரம் செய்தனர். டோல் பிளாசாவை கடந்து சென்ற லாரி, வேன் ,கார் , பஸ் உள்ளிட்ட வாகனங்களின் டிரைவர்களுக்கு போக்குவரத்து சாலை விதிமுறை கடைபிடிப்பது குறித்து விளக்கமளித்து பேசினர். இதில் போலீசார் மனோஜ், மருதப்பன், ராஜேஷ், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி