| ADDED : நவ 26, 2025 08:09 AM
விழுப்புரம்: விழுப்புரம் தனியார் திருமண மண்டபத்தில், திருநங்கைகளுக்கான விழிப் புணர்வு கூட்டம் நடந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., இளமுருகன் தலைமை தாங்கினார். அப்போது, திருநங்கைகள் இரவு நேரங்களில் சுற்றி திரிவது, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் வெளியூர் பயணிகளிடம் பணம் பிடுங்கி செல்லும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள சிறு தொழில்கள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, திருநங்கைகள் பஸ் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தேவையில்லாத செயல்களில் ஈடுபட மாட்டோம் என உறுதியளித்தனர். தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர் .