உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்கள் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

பெண்கள் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

விழுப்புரம் : பணியிடத்தில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் மற்றும் நிவாரண சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி முன்னிலை வகித்தார்.சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவர் நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கி பேசியதாவது:பணியிடத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்காக, கலெக்டர் தலைமையில் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், மாவட்ட சமூகநல அலுவலர், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், தொண்டு நிறவன தலைவர் உறுப்பினர்களாக உள்ளனர்.மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்கள், வட்டார அளவில் ஆன அலுவலகங்கள், தொழிற்சாலைகள், ஆலைகள், நிறுவனங்கள், கடைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு உட்புகார் குழு, கடந்த 2014 முதல் அமைக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பட்டியல் சேகரிக்கபட்டு, இதுவரை 110 அரசு துறைகளிலும் மற்றும் 243 தனியார் நிறுவனங்களிலும் உள்ள புகார் குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. 73 அரசு அலுவலங்களில் மற்றும் 211 தனியார் நிறுவனங்களிலும், பாதுகாப்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.அதில் வரும் புகார்களை 7 நாட்களுக்குள் உள்ளூர் புகார் குழுவிற்கு அனுப்ப வேண்டும். மேலும், மாவட்ட சமூகநலத்துறை, பெண்களுக்கான இலவச உதவி எண்.181ல் புகார் அளிக்கலாம்.பெண்கள் பணியிடத்தில் பாதிக்கப்பட்டால், 3 மாதத்திற்குள் துறையின் அதிகாரியிடம் கடிதமாக அளிக்க வேண்டும். அதற்கு துறையின் அதிகாரி 90 நாட்களுக்கு நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நிவாரம் மற்றும் நீதி வழங்க வேண்டும்' என்றார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, சமூக நல அலுவலர் ராஜம்மாள், நீதி பதிகள் ரஹ்மான், பாக்கியஜோதி, ஜெயபிரகாஷ் மற்றும் அரசு துறை அலுவலர்கள், பெண் அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை