பசுமை போகி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோட்டக்குப்பம் : கோட்டக்குப்பம் பகுதியில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பசுமை போகி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கோட்டக்குப்பம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி மேற்பார்வையில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு, புகையில்லா பசுமை போகிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சின்னக்கோட்டக்குப்பம் மற்றும் பெரிய முதலியார்சாவடி ஆகிய பகுதிகளில் நடந்தது.இதில், துாய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் ஹாஹிதா பர்வீன் கலந்து கொண்டு, வீடுகளில் இருந்து வெளியேற்றப் படும் பழைய துணி, டயர், ரப்பர் ட்யூப் மற்றும் நெகிழிப் குப்பைகளை தெருக்களில் போட வேண்டாம் எனவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள நெகிழி குப்பைகளை எரிக்க வேண்டாம் எனவும், இவற்றையெல்லாம் திடக்கழிவு மேலாண்மை சேகரிப்பு வாகனத்தில் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துப்புரவு மேற்பார்வையாளர் சங்கர், களப்பணி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.