மேலும் செய்திகள்
உலக சுற்றுச்சூழல் தின விழா
06-Jun-2025
வானுார்; வானுார் அடுத்த டி.பரங்கனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ஊர்வலத்திற்கு, தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜெயசாந்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் கிராம நிர்வாக அலுவலர் சித்ரா ஊர்வலத்தை துவக்கி வைத்து பேசினார்.ஊர்வலத்தில், பள்ளியில் செயல்பட்டு வரும் சர்.சி.வி.ராமன் மற்றும் கல்பனா சாவ்லா துளிர் இல்லங்களின் மாணவர்கள், ஜே.ஆர்.சி., மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் சுமதி, வசந்தி, சிவராமன், கிராம உதவியாளர் கோபால், கிராம ஊராட்சி செயலாளர் விஜயகுமார், தன்னார்வலர் உட்பட பலர் பங்கேற்றனர். துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
06-Jun-2025