ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை
செஞ்சி: செஞ்சி ஒன்றியம், கெங்கவரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில், ரூ.1.46 லட்சம் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சத்யா கார்த்திகேயன், ஊராட்சித் தலைவர் மகேஸ்வரி பொற்செழியன் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் யோகப்பிரியா வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார். இதில் ஒன்றிய துணை சேர்மன் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், பச்சையப்பன், டாக்டர் கவிக்கோ தமிழரசன், பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபாசங்கர், ஒன்றிய பொறியாளர் ஆனந்தி, மாவட்ட கவுன்சிலர் அகிலா பார்த்திபன், ஒன்றிய நிர்வாகிகள் வாசு, அய்யாதுரை, திருநாவுக்கரசு மாணவர் அணி அமைப்பாளர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.