உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ஜ., கவுன்சிலர் ஆர்.டி.ஓ.,விடம் மனு

பா.ஜ., கவுன்சிலர் ஆர்.டி.ஓ.,விடம் மனு

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் வார்டு மாறியுள்ள வாக்காளர்களை, மறுவரையறை செய்திட, பா.ஜ., சார்பில் மனு அளிக்கப்பட்டது.ஆர்.டி.ஓ., முருகேசனிடம், பா.ஜ., கவுன்சிலர் வடிவேல் பழனி அளித்த மனு:28வது வார்டுக்குட்பட்ட இந்திரா வீதியைச் சேர்ந்த வாக்காளர்கள் பட்டியல், 22வது வார்டில் உள்ளது.இப்பகுதி மக்கள், தேர்தலின் போது, 2 கி.மீ., துாரத்தில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளிக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்ய சிரமப்படுகின்றனர். இந்த வாக்காளர்களை 28வது வார்டில் இணைத்து, மறு வரையறை செய்ய வேண்டும். இதேபோல், எஸ்.பி.எஸ்., நகர், வி.ஆர்.எஸ்., நகர் பகுதி, 22வது வார்டில் இணைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பா.ஜ., நகர தலைவர் வனிதசுதா, பொதுச்செயலாளர் சிவராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரத் மணி, ஜெகதீஷ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை