பெண்ணிடம் வழிப்பறி சிறுவன் கைது
செஞ்சி:செஞ்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, திருவண்ணாமலை சாலை அரசு போக்குவரத்து கழகம் எதிரே வசிப்பவர் குணசேகரன் மனைவி கோவிந்தம்மாள், 66; இவர், நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த 17 வயது சிறுவன் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்தது நான்கு சவரன் செயினை தருமாறு கேட்டுள்ளார். கோவிந்தம்மாள் கூச்சல் போட்டதா ல் சிறுவன் தப்பியோடிவிட்டார். அதே சிறுவன், இரவு 7:45 மணியளவில் செஞ்சியில் இருந்து பொன்பத்தி க்கு, ஏரிக்கரை சாலையில் சென்று கொண்டிருந்த பிரேமலதா, 29; என்பவரை வழிமறித்து அவரிடம் இருந்து 8,000 ரூபாய், மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டை பறித்து கொண்டு தப்பியோடினார். பிரேமலதா கூச்சல் போட்டதால், அந்த வழியாக வந்த பொதுமக்கள் சிறுவனை பிடித்து செஞ்சி போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் சிறுவன் போதையில் இருந்ததும், பிளஸ் 1 வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுவனை கைது செய்து செஞ்சி கோர்ட்டில் ஆஜர் படுத்தி, கடலுாரில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.