உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பள்ளி வேன் மோதி சிறுவன் பலி

 பள்ளி வேன் மோதி சிறுவன் பலி

வானுார்: வானுார் அருகே பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை இறந்தது. திருவக்கரை அருகே உள்ள நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் மகன் ருத்தீஷ்குமார், 2; குழந்தை நேற்று மாலை வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்தது. 5:00 மணியளவில் அந்த வழியாக சென்ற தனியார் பள்ளி வேன் மாணவர்களை இறக்கி விட்டு மீண்டும் டிரைவர் வேனை எடுத்துள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த ருத்தீஷ்குமார் மீது வேன் மோதியதில் படுகாயமடைந்த குழந்தையை மீட்டு வானுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ருத்தீஷ்குமாரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை