திண்டிவனம், : ஆசிய அளவிலான இரட்டைச்சுருள்வாள் போட்டியில் தட்சசீலா பல்கலை மாணவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.இதற்கான முதற்கட்ட போட்டி கடலுார் செயின்ட் ஜோசப் கல்லுாரியில் நடந்தது. இறுதிச்சுற்று, நாகர்கோவிலில் நடந்தது. இதில் இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர், பூடான், இந்தோனிஷியா, மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை, மியான்மர், பங்களாதேஷ் ஆகிய பத்து நாடுகளில் இருந்து 250 வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 50 பேர் பங்கேற்றனர். இதில் இரட்டைச் சுருள்வாள் வீச்சு பிரிவில் தட்சசீலா பல்கலை மாணவர் ஹரிகரன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.அதையொட்டி, பல்கலையில் நடந்த பாராட்டு விழாவில், மாணவர் ஹரிகரனை பல்கலை வேந்தர் தனசேகரன், துணைவேந்தர் விவேக் இந்தர் கோச்சர், பதிவாளர் செந்தில், இணை பதிவாளர் ராமலிங்கம், பொறியியல் துறை டீன் சுப்பிரமணியன் ஆகியோர் பாராட்டி, வாழ்த்தினர்.கலை அறிவியல் துறை முனைவர் தீபா, மாணவர் நலன் பொறுப்பாளர் வீரமுருகன், உடற்கல்வி இயக்குநர் விஜயன், பயிற்சியாளர் கோவர்த்தனன், பேராசிரியர்கள் மற்றும் பல்கலை நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.