லாரி மீது பஸ், கார் மோதி விபத்து திண்டிவனம் அருகே 11 பேர் காயம்
திண்டிவனம்: திண்டிவனம் அருகே லாரி பின்னால் அரசு பஸ், கார் மீது மோதிய விபத்தில் 11 பேர் காயமடைந்தனர்.திருச்சியிலிருந்து சென்னை நோக்கி நேற்று அதிகாலை பயணிகளுடன் அரசு பஸ் சென்றது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சலவாதி பஸ் நிறுத்தம் அருகே அதிகாலை 4:15 மணியளவில் வந்தபோது, முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் அரசு பஸ் லாரியின் பின்னால் மோதியது.அப்போது பஸ்சுக்கு பின்னால் நாகப்பட்டிணத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கார் பஸ் பின்னால் மோதியது.இந்த விபத்தில் காரைக்காலைச் சேர்ந்த பஸ் கண்டக்டர் ரஞ்சித், 47; மற்றும் பயணிகள் குளித்தலை நிஷாந்த், சீர்காழி உத்திரபாதி, மதுராந்தகம் ரவிச்சந்திரன் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.அனைவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.