புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
கண்டாச்சிபுரம்; முகையூர் அடுத்த அருளவாடியிலிருந்து, திருமல்ராயபுரம் வழியாக கண்டாச்சிபுரத்திற்கு புதிய வழித்தடத்தில் பஸ் வசதி துவங்கப்பட்டது. திருமல்ராயபுரம் ஊராட்சி யில் நடந்த துவக்க விழாவிற்கு, முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, மாவ ட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் அமுதாதேவி வீரன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி, புதிய வழித்தடத்தில் பஸ்சை இயக்கி வைத்தார். விழாவில், அரசு போக்கு வரத்துக் கழக மேலாளர் ஜெய்சங்கர், ஒன்றிய செயலாளர் லுாயிஸ், வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், ஏழுமலை, ஜீவானந்தம், மணி மற்றும் பலர் பங்கேற்றனர்.