உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஸ் கண்ணாடி உடைப்பு: மர்ம ஆசாமிக்கு வலை

பஸ் கண்ணாடி உடைப்பு: மர்ம ஆசாமிக்கு வலை

திண்டிவனம் : திண்டிவனத்தில் அரசு பஸ் மீது கல் வீசி கண்ணாடியை உடைத்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த முனிவேல், 45; என்பவர் ஓட்டினார்.திண்டிவனம் - சென்னை சாலையில் காவேரிப்பாக்கம் ஏரி பகுதி வழியாக வந்த போது, 30 வயது மதிக்கத்தக்க நபர், பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல் வீசி தாக்கி சேதப்படுத்தினார்.இதுகுறித்து முனிவேல் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை