உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கார் டயர் வெடித்து விபத்து தி.மு.க.,பிரமுகர் மகன் காயம்

கார் டயர் வெடித்து விபத்து தி.மு.க.,பிரமுகர் மகன் காயம்

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே கார் டயர் வெடித்து விபத்திற்குள்ளானதில் தி.மு.க., பிரமுகர் மகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.புதுச்சேரி திருவாண்டார்கோயில் மெயின்ரோட்டில் வசித்து வருபவர் காந்தி, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர். இவரது மகன் சபரிவாசன்.. இவர் நேற்று வீட்டில் இருந்து தனது காரில் புதுச்சேரி நோக்கி சென்று்ள்ளார். கண்டமங்கலம் மேம்பாலம் அருகே சபரிவாசன் சென்ற போது, திடீரென்று காரின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையார தடுப்புக் கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டிச்சென்ற சபரிவாசன் லேசான காயத்துடன் அதிஷ்டனவசமாக உயிர் தப்பினார். கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, சபரிவாசனை மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ